லண்டன் தொழிலதிபர்.... வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழர்களிடம் பண மோசடி: நடிகர் சிம்புவின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவேலை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி தான் ஒரு தொழிலதிபர் என்றும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறியும் பணம் பறித்துள்ளார்,

ருஷ்கின் என்ற அறக்கட்டளை நடத்தி வரும் இவர், தன்னை ஒரு லண்டன் கல்வியாளர் போன்று விளம்பரத்திக்கொண்டார்.

சமீபத்தில் சிம்பு லண்டன் சென்றபோது அவருடன் நெருக்கமான இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து, தான் சிம்புவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது போல காட்டியிருக்கிறார்.

மேலும், ஆர்மீனியா நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், 6 மணி நேரம் வேலை செய்தால் ரூ.40 ஆயிரம் சம்பளம் மற்றும் தங்குமிடம் உணவு இலவசம் என்றும் விளம்பரம் செய்து தமிழ்நாட்டில் உள்ள பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

ஆர்மீனியா நாட்டிற்கு சென்ற சில இளைஞர்கள் அங்கு விசா இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers