6 வயது பிரித்தானிய சிறுமியைக் கொன்றவனின் புகைப்படம் வெளியானது! இது வரலாற்றில் முதல் முறை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஸ்காட்லாந்து சட்டப்படி பொதுவாக 18 வயதுக்கு கீழ் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களோ, பெயரோ அவர்களின் எதிர்காலம் கருதி ஊடகங்களில் வெளியிடப்படாத நிலையில், முதல் முறையாக 6 வயது பிரித்தானிய சிறுமியான அலீஷா மெக்பைலைக் கொன்ற சிறுவனின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

6 வயது அலீஷா கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்த ஒரு பொலிஸ் அதிகாரி கண்ணீர் விட்டு கதற, பிரேதப் பரிசோதனை செய்த, அனுபவம் மிக்க ஒரு மருத்துவர் தனது மொத்த அனுபவத்திலும் இத்தனை காயங்கள் ஏற்படுத்திய ஒரு கோரக் கொலையை தான் கண்டதில்லை என்று கூற, நீதிபதி ஒருவர் அந்த சிறுவன் கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்ததாக முறைப்படி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிகைகள் உட்பட பலதரப்பிலிருந்தும் இத்தகைய கொடூராக் குற்றம் செய்தவனின் புகைப்படமும் விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே பல ஆண்டு கால வழக்கத்திற்கு மாறாக அந்த குற்றவாளியைக் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவனது பெயர் ஆரோன் காம்பெல்.

தனது மகன் ஒரு சாதாரண சிறுவன் என அவனது தாயான ஜானட் காம்பெல் சாட்சியமளித்துள்ள நிலையில், ஒரு வேளை அவனை காப்பாற்றுவதற்காக அப்படி கூறினாரா என சந்தேகிக்க வைக்கின்றன அவனைக் குறித்து அண்டை அயலகத்தார் கூறும் விடயங்கள்.

விலங்குகளை பிடித்து உயிரோடு தோலை உரித்து மண்ணைத்தோண்டி புதைப்பது, வன்முறை வீடியோக்கள் பார்ப்பது, முரட்டு விளையாட்டுகள் விளையாடுவது, வயதில் பெரியவர்கள் கூசும் அளவுக்கு முறைத்துப் பார்ப்பது என அவனைப் பற்றி பலரும் மோசமாகவே கூறியுள்ளனர்.

இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஒரு சிறுமியை தண்ணீரில் அழுத்தி கொலை செய்ய முயன்றது, இன்னொரு இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதை வீடியோ எடுத்து நண்பர்களிடையே பரப்பியது என அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆரோனின் வகுப்பு தோழியான 16 வயது பெண் ஒருத்தி, கடந்த ஆறு மாதங்களாக ஒரு சரியாக திட்டமிடப்பட்ட ஒரு கொலையை எப்படி செய்வது என்பது குறித்து ஆரோன் செய்திகள் அனுப்பிக் கொண்டும் பெருமையடித்துக் கொண்டதுமாக இருந்ததாக அதிரடியாக சாட்சியமளித்துள்ளாள்.

தனது நண்பர்கள் அவன் வேடிக்கைக்காக அவ்வாறு சொல்வதாகவே கடைசி வரை நம்பிக் கொண்டிருந்ததாக அவள் தெரிவித்துள்ளாள்.

ஆரோன் காம்பெல் அலீஷாவை வன்புணர்வு செய்து மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers