திருமணமான சில மணிநேரத்தில் உயிரிழந்த புதுப்பெண்: கண்ணீருடன் கணவர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த விக்டோரியா ஜெப் என்பவர் தனக்கு திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் இறந்துபோனார்.

42 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய ரொனால்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தனது மகன் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு உணவருந்திய விக்டோரியா, உறங்க செல்கிறேன் என்று கூறிச்சென்றவர் அப்படியே சுயநினைவை இழந்து உறக்கத்திலேயே மரணமடைந்தார்.

இதுகுறித்து கணவன் ரொனால்ட் கூறியதாவது, வேலை பார்க்கும் இடத்தில் அனைவரிடமும் அன்போடு பழகும் அவளின் குணம் பிடித்துப்போன காரணத்தால் அவள் மீது காதல் கொண்டு திருமணம் செய்தேன்.

திருமணம் முடிந்தவுடன் அவளது மகன் மற்றும் நான் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக உணவருந்தினோம். சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிச்சென்றாள், ஆனால் அவள் உறங்கிகொண்டிருக்கையில் அவளது உடல் நீல நிறமாக மாறியது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தவுடன் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர், மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டாள் என தெரிவித்தனர்.

அவள் இல்லாத இந்த உலகில், அவளுடன் சென்ற இடங்களுக்கு செல்கையில் பழைய நியாபங்கள் மற்றும் அவள் இருப்பது போல தெரிகிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers