டயானாவைப்போல கேட்டை துரத்திய புகைப்படக்காரர்கள்: ஆத்திரமுற்ற இளவரசர் வில்லியம்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானாவை துரத்தியது போல் பாப்பராஸி புகைப்படக்காரர்கள் இளவரசர் வில்லியமின் காதலியான கேட்டை அவரது 25ஆவது பிறந்த நாள் அன்று துரத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட்டிடம் அவரது பிறந்த நாள் அன்று தனது காதலை வெளிப்படுத்துவார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

கேட் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேறி தனது காரில் ஏறுவதற்குள் அவரை துரத்திய புகைப்படக்காரர்கள் படபடவென புகைப்படம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.


அவர்களிடமிருந்து தப்பி, கிட்டத்தட்ட ஓட்டம் பிடிக்கும் கேட் தனது காரில் ஏறி அங்கிருந்து விரைகிறார்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் ஆத்திரமுற்று தனது காதலியை தொல்லைப்படுத்துவதை நிறுத்துமாறு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கேட்டின் பெற்றோரும்கூட தங்கள் மகள் தினமும் இதுபோன்ற ஏராளம் புகைப்படக்காரர்களால் பின்தொடரப்படுவது குறித்து கவலை தெரிவித்திருந்தார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்