£3,000 செலவில் ஜாலியாக தேனிலவு சென்ற தம்பதி: வேதனையுடன் ஊருக்கு திரும்ப காரணம் என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி தேனிலவுக்காக துனிசியாவுக்கு சென்ற நிலையில் குளிக்கும் போது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, மோசமான அனுபவங்களை அங்கு தம்பதி சந்தித்துள்ளனர்.

ஸ்காட் பீல்ட் என்ற நபர் தனது மனைவி சாராவுடன் துனிசியாவுக்கு தேனிலவு சென்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளும் உடன் சென்றனர்.

£3,000 செலவில் துனிசியாவுக்கு அவர்கள் சென்ற நிலையில் சகாரா கடற்கரை ஹொட்டலில் தங்கினார்கள்.

அங்குள்ள குளியலறையில் பீல்ட் குளித்து கொண்டிருந்தார். குளியலறையின் கதவு கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தது.

அப்போது கதவானது திடீரென வெடித்தது, பின்னர் கண்ணாடி துகள்கள் பீல்ட் உடல் முழுவதும் குத்திய நிலையில் வலியால் துடித்த அவர் கீழே விழுந்தார்.

இதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியா திரும்பினார்.

இது குறித்து பீல்டின் மனைவி சாரா கூறுகையில், அடிப்பட்டவுடன் சுயநினைவை இழந்து என் கணவர் கீழே விழுந்துவிட்டார்.

ஆனால் ஹொட்டல் ஊழியர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

அங்கிருந்த நண்பர்கள் உதவியுடன் பீல்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

அங்கு மருத்துவர்கள் பணம் கட்டியபின்னர் தான் மருத்துவம் பார்க்கவே தொடங்கினார்கள்.

தற்போது சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டோம், இங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஹொட்டல் ஊழியர்கள்கள் என் கணவர் மதுபோதையில் கண்ணாடி கதவில் முட்டி கொண்டதாக பொய்யாக பழி சுமத்தினார்கள்.

ஆனால் மருத்துவ அறிக்கையில் என் கணவர் மது அருந்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் எங்கள் கனவு தேனிலவு பயணம் மோசமானதாக இருந்தது.

இது குறித்து எங்களை அழைத்து சென்ற தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்