மேகனுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தை? வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
677Shares

நியூயார்க்கில் பிரித்தானிய இளவரசி மேகனின் நெருங்கிய தோழிகள் அவருக்கு நடத்திய ஆடம்பர வளைகாப்பு நிகழ்ச்சி, அவருக்கு பிறக்கப்போகும் குழந்தை என்னவாக இருக்கும் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.

சுமார் 300,000 டொலர்கள் செலவில் நடத்தப்பட்ட மேகனின் வளைகாப்பு நிகழ்ச்சி அமெரிக்காவின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ற கேள்விக்கு ஏற்கனவே மேகன், அது ஒரு சர்ப்ரைஸ் என்று பதில் கூறியிருந்த நிலையில், அவரது வளைகாப்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அவருக்கு பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்திருந்தன.

மேகனின் நெருங்கிய தோழிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் அமல் க்ளூனி ஆகியோர் பங்கு பெற்ற அந்த நிகழ்ச்சியில் எங்கு பார்த்தாலும் பூக்களிலிருந்து பஞ்சு மிட்டாய் வரை எல்லாமே இளஞ்சிவப்பு (Pink) நிறத்திலேயே காணப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் பலரும் இளஞ்சிவப்பு நிறத்திலேயே உடை அணிந்து வந்திருந்தது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

விருந்தினர்களில் ஒருவரான Gayle King பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால் அமெரிக்காவில் நடைபெற்ற மேகனின் இந்த பிரமாண்ட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலேயே வாழும் மேகனின் தாயார் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்