உடலில் மின்சாரம் பாய்ச்சி கடுமையான சித்ரவதைக்குள்ளாகும் மேகன் தோழி: அதிர்ச்சி தரும் அறிக்கை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சவூதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேகன் தோழி உள்ளிட்ட 8 பேரை நிர்வாணமாக, உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்துவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி கோரி போராடிய, சமூக ஆர்வலர்களில் முக்கிமான 9 பெண்களை கடந்த ஆண்டு அந்நாட்டு அரசு கைது செய்தது.

இவர்களுடன் சேர்த்து மேகன் மெர்க்கலின் 29 வயது தோழியான Loujain-al-Hathloul-ம் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் அனைவரும் தற்போது ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்ட விமர்சன தடுப்பு குழு (DRP), சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவிப்பதாக ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

அந்த பெண்களை சிறையில் சந்திப்பதற்காக பலமுறை போராடிய கிறிஸ்ப்பின் பிளண்ட், லயலா மோரன் மற்றும் பால் வில்லியம்ஸ் என்கிற மூன்று எம்பிக்களும் தங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னரே இந்த அறிக்கையினை வெளியிட்டுருக்கின்றனர்.

அதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை அவர் முன்பு வைத்தே விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள், அந்த பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து பல இடங்களில் தொட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததோடு, 'உங்களுக்கு உதவ மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் எங்கே?' என கிண்டல் செய்துள்ளனர்.

தண்ணீரை பலமாக பீய்ச்சி அடித்து துன்புறுத்தியதோடு, உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்தக்கொடூர செயல்கள் அனைத்திற்கும், சவூதி அரேபிய அதிகாரிகள் முழுபொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்