குழந்தையின் அருகில் உறங்கியபடியே இறந்த தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

குழந்தையின் அருகே படுத்துறங்கிய தாய் அதிகாலை இறந்த நிலையில் கிடந்துள்ள சோக சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ரையனா பெர்குசன் என்கிற 26 வயது தாய்க்கு, கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், அவள் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகள் அகற்றப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக புற்றுநோய் அவருடைய முதுகெலும்பிற்கு பரவியது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய 3 வயது மகளின் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அதிகாலை விடிந்து பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பெர்குசனின் சகோதரி, பெர்குசன் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க கூடியவள். அவளை சுற்றுய் இருப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பாள். பிறரை சிரிக்க வைப்பதில் மில்லியன் மக்களில் அவளும் ஒருவர்.

அவள் இல்லாமல் இருப்பது பெரும் துயரத்தை தருகிறது. ஆனால் அவளுடைய குணம் அனைத்தையும், அவளுடைய மகள் இரண்டாவது பெர்குசனுக்கு விட்டு சென்றுள்ளார்.

அவளுடைய மகள் நோவா-நோஎல்லியை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்