அம்மாவின் வாழ்க்கை என்னை தலை குனிய வைத்தது! உண்மையை உடைத்த இளவரசர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ராஜ குடும்ப மரபை மீறக்கூடாது என கட்டுப்பாடாக வாழ்ந்த காலகட்டத்தில், தோள்கள் தெரியும் உடை அணிந்தால் அது தன் மகனை அசௌகரியமாக உணரச் செய்யும் என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த உடையை இளவரசி டயானா அணிய மறுத்தார் என செய்திகள் வெளியாகியுள்ள அதே நேரத்தில், அம்மாவின் பொது வாழ்க்கை தன்னை தலை குனியச் செய்ததாக இளவரசர் வில்லியம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த அந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததாகவும், அப்போது 14 வயதாக இருந்த இளவரசர் வில்லியமை அந்த உடை அசௌகரியமாக உணரச் செய்யலாம் என்பதற்காக அந்த உடையை அணிய மறுத்தாராம் இளவரசி டயானா.

ஆனால் அந்த உடை அல்ல, தனது தாயின் பொது வாழ்க்கை தன்னை தலை குனியச் செய்வதாக தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார் இளவரசர் வில்லியம்.

இளவரசர் சார்லசும் டயானாவும் தங்கள் பிரிவு தங்கள் மகன்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுத்தும், இளவரசர்கள் வில்லியமும், ஹரியும் தங்கள் பெற்றோரின் விவாகரத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில், என் தாய் இறந்த துக்கத்தை 20 ஆண்டுகளாக மனதிற்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறேன் என இளவரசர் ஹரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மையில் சார்லஸ் டயானா தம்பதியரின் பிரிவின்போது, டயானா ஊடகங்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தது, பதின்ம வயதில் இருந்த வில்லியமை அதிகமாக பாதித்ததாக ராஜ குடும்பம் குறித்து எழுதும் நபர்களில் ஒருவரான Katie Nicholl என்பவர் தெரிவித்துள்ளார்.

வில்லியம், ஹரி குறித்து ஒரு புத்தகம் எழுதும்போது Katie Nicholl வில்லியமுடைய நெருக்கமாக நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, குடும்பத்தில் நடக்கும் விடயங்கள் வில்லியமின் கவனத்தை சிதறச் செய்ததைக் குறித்து பேசியுள்ளார் அந்த நண்பர்.

அந்த காலகட்டத்தில் பல பத்திரிகைகள் சார்லஸ் டயானாவின் திருமணம் பிரச்சினையில் இருப்பதாக தொடர்ந்து எழுதின.

அப்போது வில்லியம், அப்பா ஒருபோதும் என்னை தலைகுனிய வைத்ததில்லை, ஆனால் அம்மா சில நேரங்களில் அப்படி செய்து விடுகிறார் என்றாராம்.

தங்களுக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், சார்லசும் டயானாவும் விடுதியில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளை சென்று பார்க்க தவறுவதே இல்லையாம்.

அதிலும் நினைத்தபோதெல்லாம் வில்லியமைக் காணச் செல்வாராம் டயானா.

எங்களைப் பொருத்தவரையில், டயானா ஒரு இளவரசி என்பதெல்லாம் இல்லை, அவர் வில்லியம் ஹரியின் அழகான அம்மா என்கிறார்கள் வில்லியமின் பள்ளித்தோழர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்