பிரித்தானியாவில் குடியுரிமை தேர்வுகளில் நடக்கும் மோசடி! சிக்கிய ஆதாரம்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடியுரிமை தேர்வுகளில் நடக்கும் ஒரு மாபெரும் மோசடி குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய அரசியல் சாசனம், மத்திய கால கட்ட வரலாறு, கலை முதற்கொண்டு விளையாட்டு வரை பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் பிரித்தானிய குடியுரிமை தேர்வுகளில், நான்கில் ஒருவர் தோல்வியடைகிறார்.

இதனால் குறுக்கு வழியில் குடியுரிமை தேர்வுகளில் வெற்றிபெற விரும்புபவர்களை குறிவைத்து, மோசடி ஒன்று நடைபெறுவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை தேர்வுகளில் தங்களுக்கு உதவ, புலம்பெயர்வோர் சில மத்தியஸ்தர்களை உதவிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வேறு வகையில் கூறினால், சிலர், புலம்பெயர்வோர் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக, பணம் பெற்றுக்கொண்டு ஒரு நவீன மோசடி முறையில், அவர்கள் குடியுரிமை தேர்வுகளில் வெற்றிபெற உதவுகிறார்கள்.

பத்திரிகையாளர் ஒருவர், புலம்பெயர்வோர் போல் காட்டிக்கொண்டு, குடியுரிமை தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும், லண்டனில் அமைந்துள்ள Ideal Learning Academy என்னும் நிறுவனத்தை அணுகியபோது, அந்த நிறுவனத்தின் இயக்குநரான Abdul Reza Masud என்பவர் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக, ஏமாற்றி வெற்றி பெறச்செய்வதற்காக 2,000 பவுண்டுகள் கேட்டுள்ளார்.

அவர் கூறிய திட்டம் இதுதான், காதுக்குள் மறைத்து வைக்கப்படும் அளவிற்கு சிறிய இயர் போன் ஒன்று உங்களிடம் கொடுக்கப்படும்.

நீங்கள் கேள்வியை மெதுவாக வாசித்தால் போதும், மறுமுனையில் இருப்பவர் அந்த கேள்விக்கான பதிலை உங்களுக்கு கூறுவார்.

உதாரணத்திற்கு கேள்விகளுக்கான பதில், பொதுவாக A, B, C, D என்பவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதால், நீங்கள் வாசித்த கேள்விக்கான பதில், A அல்லது B என்று மறுமுனையில் இருப்பவர் கூற, அதைக் கேட்டு நீங்கள் அந்த பதிலை டிக் செய்யலாம்.

இந்த முறையை பயன்படுத்தி ஏராளமானோர் ஏமாற்றி பிரித்தானிய குடியுரிமை பெற்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அலுவலகத்திற்கு இந்த மோசடி குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Abdul Reza Masudஇடம் இது குறித்து கேட்டபோது, அவர் தனது நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்