புது வீட்டில் குடிபெயரும் இளவரசர் ஹரி - மெர்க்கலுக்கு மகாராணி கொடுக்கும் பரிசு: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும், மேகன் மெர்க்கலும் புதிய வீட்டுக்கு குடிபோகவுள்ள நிலையில் அவர்களுக்கு மகாராணி கொடுக்கவுள்ள பரிசு குறித்து தெரியவந்துள்ளது.

ஹரியும், மெர்க்கலும் விரைவில் Windsor-ல் உள்ள Frogmore Castle இல்லத்தில் குடிபெயரவுள்ளனர்.

தற்போது இங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் புதிய வீட்டுக்கு குடிபெயரும் தம்பதிக்கு மகாராணி எலிசபெத் பழங்கால ஓவியங்களை பரிசாக அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முக்கிய ஓவியங்களை ஹரி மற்றும் மெர்க்கலிடம் கொடுத்தபின்னர் அதில் தங்களுக்கு பிடித்ததை அவர்கள் தேர்வு செய்து எடுத்து கொள்ளலாம்.

ராஜ குடும்பத்திற்கு மட்டும் சொந்தமான ஓவியங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து தான் ஹரிக்கும், மெர்க்கலுக்கும் ஓவியங்கள் தரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்