திடீரென வேலையாட்களின் அறைக்கு சென்று சோபாவில் படுத்துறங்கிய ராணி: வெளியான சுவாரஸ்ய தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணி ஒரு முறை திடீரென வேலையாட்களின் அறைக்கு சென்று அங்கிருந்த சோபாவில் படுத்துறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெக்கி ஹோத் என்பவர் 1959ம் ஆண்டு அரச குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்தார். 35 வருடங்களுக்கு மேலாக ராணியின் உதவி ஆடை அலங்கார நிபுணராக பணிபுரிந்து வந்தார்.

இவரும் மற்றொரு ஆடை நிபுணருமான மே ப்ரெண்டிஸ் ராணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

பெக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய 89 வயதில் உயிரிழந்தார். அவரை நினைவு கூறும் விதமாக ஒரு சில வாரங்களுக்கு முன்பு, விண்டோசர் கிரேட் பார்க் நகரில் உள்ள the Royal Chapel of All Saints-ல் முன்னாள் அரண்மனை ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கூடினார்கள்,

இந்த நிலையில் அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் பெக்கி இருந்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒருமுறை ராணி எடின்பர்க் நகரில் உள்ள ஹோலிரோட்ஹவுஸில் தங்கினார். இரவு நேரமாகியும் உறங்காமல் பெக்கியும், மே ப்ரெண்டிஸும் வாக்குவாதத்தில் ஆரம்பித்து கடுமையான சண்டை போட்டு கொண்டிருந்துள்ளனர்.

இதனால் பக்கத்து அறையில் இருந்த ராணியின் தூக்கம் கலைந்தது. உடனே இரவு ஆடையில், கையில் ஒரு போர்வையுடன் வேகமாக வேலையாட்களின் அறைக்கு ராணி வந்துள்ளார். அங்கிருந்த சோபாவில் அமர்ந்த அவர் நான் உறங்க போகிறேன் என கூறிவிட்டு படுத்துள்ளார்.

இதனை பார்த்த வேலையாட்கள் அனைவரும் என்ன செய்வதென தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக அமைதியான முறையில் அறையை காலி செய்துகொண்டு வேலையாட்கள் வெளியில் கிளம்பினர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers