இளவரசர் பிலிப் ஏற்படுத்திய விபத்தால் காயமடைந்த பெண்ணுக்கு வந்த சோதனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் பிலிப் ஏற்படுத்திய விபத்தால் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

பிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப், கடந்த 17ம் தேதி கார் ஒட்டி சென்ற போது, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் அருகே உள்ள சாலையில் விபத்தில் சிக்கினார்.

உள்ளூர் நேரப்படி பகல் 3 மணியளவில் நடந்த சாலை விபத்தில் இளவரசர் காயமின்றி தப்பினாலும், அவரால் விபத்தில் சிக்கிய எம்மா ஃபேர்வெல்டர் (46) என்கிற பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவமானது பிரித்தானியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விபத்து குறித்து பெரும் வருத்தத்துடன் கடிதம் எழுதியிருந்த இளவரசர் பிலிப், உங்களுடைய காயத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். துன்பகரமான அனுபவத்திலிருந்து விரைவில் மீண்டு வர விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள எம்மா, விபத்து நடந்து நீண்ட நாட்களாகியும் பாதிக்கப்பட்ட கை சரியாகாததால், முறிவை சரிசெய்ய ஒரு டைட்டானியம் தகடு பொறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers