என் அம்மாவை இழந்து 20 வருடங்களாக உணர்ச்சிகளை எல்லாம் மூடி வைத்திருக்கிறேன்: மனம் திறந்த ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசி டயானா விபத்தில் சிக்கி இறந்த சமயம் அவருடைய உடலை வாங்க நானும் வருகிறேன் என கூறிய ஹரிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் சார்லஸை திருமணம் செய்துகொண்ட டயானாவிற்கு வில்லியம், ஹரி என்கிற இரண்டு குழந்தைகள் பிறந்தன.

1996ம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து சென்ற டயானா ஆகஸ்ட் 31, 1997ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக பலியாகினார்.

அவருடன் சேர்ந்து டோடி ஃபாய்டு, டிரைவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஹென்றி பால் ஆகியோரும் உயிரிழந்தனர்.

அந்த சமயம் இளவரசர் சார்லஸ் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்து கொண்டு ராணியுடன் பால்மோரலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அப்பொழுது தாய் இறந்ததை கேள்விப்பட்ட இளவரசர் ஹரி, நானும் அம்மாவின் உடலை வாங்க பாரிஸ் வரலாமா என கேட்டுள்ளார். ஆனால் இளவரசர் சார்லஸ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஆவணப்படம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள டயானாவின் செய்தியாளரும் நண்பருமான ரிச்சர்டு கே, டயானாவின் உடலை மீண்டும் கொண்டு வர பாரிசுக்குப் போவதாக சார்லஸ் முடிவு செய்தார்.

"இது ஒரு ஆச்சரியமான மற்றும் தைரியமான நடவடிக்கை. அவர் ஒரு முன்னாள் கணவர், தனது மகன்களுக்கு தந்தை என்பதை தவிர வேறு எந்த உரிமையும் அப்போது அவருக்கு உரிமை இல்லை.

சார்லஸ் அரச விமானத்தை பாரிசுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார், ஆனால் ராணி அதை அனுமதிக்கவில்லை"

"சார்லஸ் தனது வாழ்நாளில் அவருக்காக போராடியதைவிட டயானாவுக்கு கடினமாக போராடினார். இருப்பினும் இளவரசர் தன்னுடைய முடிவில் இருந்து மாறவில்லை. இறுதியில் ராணியும் அதற்கு சம்மதித்த பின்னரே விமானத்தை எடுத்து சென்றார்" என கூறியுள்ளார்.

ஹரி எப்பொழுதுமே டயானாவின் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தவர். டயானா மீது அதிக பிரியம் கொண்டவர். தன்னுடைய தாயின் இழப்பினால் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளானது குறித்து பேசியிருக்கும் ஹரி, 12 வயதில் என் அம்மாவை இழந்தது, கடந்த 20 ஆண்டுகளாக என் உணர்ச்சிகளை எல்லாம் மூடிவிட்டது.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, என்னுடைய வேலைகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என கூறியிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers