பிரித்தானியா இளவரசரின் பிரத்யேக கார் விற்பனைக்கு வருகிறது! விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் பிலிப் பயன்படுத்திய கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியுள்ளதால், அதை வாங்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப்(97), கடந்த 17-ஆம் திகத் கார் ஒட்டி சென்ற போது, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் அருகே உள்ள சாலையில் விபத்தில் சிக்கினார்.

இந்த சாலை விபத்தில் இளவரசர் காயமின்றி தப்பினாலும், அவரால் விபத்தில் சிக்கிய மற்றொரு பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் பிலிப் அந்த பெண்ணிற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து தற்போது அவருக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட(2016-ஆம் ஆண்டு) Land Rover கார், விற்பனைக்கு வந்துள்ளது.

அந்த கார் தற்போது வரை 3200 மைல் வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல் திறன் இன்றளவு வரை குறையவில்லை.

இந்த காரில் தான் பிலிப் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது மனைவி ஆகியோரை வின்ஸ்டர் வரைக்கும் ஓட்டிச் சென்றார்.

இதையடுத்து தற்போது அந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 120,000 பவுண்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே புதிய வகை கார்களின் மதிப்பு 114,000 பவுண்ட் தான், அரச குடும்பத்தினர் பயன்படுத்தியதால், இவ்வளவு தொகை என்று கூறப்படுகிறது.

இளவரசர் பயன்படுத்திய கார் இப்போது விற்பனைக்கு வந்துள்ளதால், இதை வாங்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் விபத்தில் சிக்கிய கார் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers