லண்டனில் இறந்த பின்னரும் மனைவியிடம் ஐ லவ் யூ என சொன்ன கணவன்... நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கணவர் உயிரிழந்த நிலையில் கரடி பொம்மையில் மனைவி குறித்து அவர் ஆடியோ பதிவு செய்துவிட்டு அதை பரிசாக கொடுத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Watford-ஐ சேர்ந்தவர் டேரன் ஈஸ்டன் (24). இவர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது காதலி லவ்ரனை கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் டேரன் கடந்த வாரம் உயிரிழந்தார்.

டேரனுக்கும், லவ்ரனுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் லவ்ரனிடம் சமீபத்தில் கரடி பொம்மை ஒன்றை கொடுத்தார்.

அந்த பொம்மையை டேரன் கொடுக்க சொன்னதாக கூறினார்.

இதையடுத்து கரடி பொம்மைக்கு கீ கொடுத்தபோது அதில் டேரன் பேசிய ஆடியோ கேட்டது.

அதில், ஐ லவ் யூ, உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன், என் உலகில் நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என கூறியிருந்தார்.

கணவரின் குரலை கேட்டு லவ்ரன் கண்கலங்கினார். அவர் கூறுகையில், என் கணவரின் குரலை என்றேனும் மறந்து விடுவேனோ என கவலை கொண்டிருந்தேன்.

ஆனால் பொம்மையில் அவர் குரல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இனி அவர் குரலை கேட்க வேண்டும் என எப்போது தோன்றினாலும் கேட்பேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers