தாயின் உயிரை காப்பாற்றிய மகளின் மழலை சிரிப்பு: கண் கலங்கிய கணவன்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தற்கொலைக்கு முயன்ற தாய் ஒருவரின் உயிரை, அவருடைய மகளின் சிரிப்பு காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜெனிபர் மாலிக் (29) என்கிற தாய் தன்னுடைய வாழ்நாளில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், எனக்கு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக சாப்பிடுவேன், ஆனால் ஒருநாளும் உடற்பயிற்சி மேற்கொண்டது கிடையாது.

இதனால் என்னுடைய உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. ஆரம்பப்பள்ளியில் இருந்தே அனைவரும் என்னை கிண்டல் செய்வார்கள். பள்ளியில் அனைவரின் முன் நிற்க வைத்து, என்னுடைய உடல் எடை பற்றி பேசி கேலி செய்வார்கள்.

இதனால் நான் வெளியில் செல்வதற்கே தயக்கம் காட்டுவேன். எனக்கு பின்னின்று பலரும் வசைபாடுவார்கள். அவற்றை கேட்டு பொறுக்க முடியாமல் நான் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது தான், பில்லியை சந்தித்தேன். என்னுடைய தோற்றத்தை பார்த்து அனைவரும் ஒதுங்கி செல்லும் நேரத்தில், பில்லி என்னிடம் வந்து போன் நம்பர் கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், அது பிடித்திருந்தது.

அதன் பிறகு எங்களுக்கு நவோமி என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவளுடன் என்னால் விளையாட கூட முடியவில்லை. என்னுடைய உடல் எடை அதிகமாக இருந்ததால், மற்ற தாயை போல மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

ஏற்கனவே அனுபவித்து வந்த துன்பத்தில், இது இன்னும் அதிக வலியை கொடுத்தது. என்ன செய்வதென தெரியாமல் கதறி அழுதேன்.

2016ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி, தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தேன். எப்படியும் நான் இறந்த பிறகு, நவோமியை நிச்சயமாக பில்லி நன்கு கவனித்து கொள்வார் என்பது எனக்கு தெரியும்.

கையில் அதிகமான தூக்க மாத்திரைகளுடன் என்னுடைய மக்களிடம் சென்றேன். அவளை இறுதியாக பார்த்துவிட்டு தற்கொலை செய்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவள் புரண்டு படுக்கும்போது தூக்கத்தில் லேசாக சிரித்தாள்.

அதனை பார்த்ததும், என் மனது அப்படியே மாறிவிட்டது. இப்படி ஒரு அழகான குழந்தையை விட்டு நான் எப்படி செல்வேன். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. என் மனதை மாற்றிக்கொண்டு பல மணிநேரமாக ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தேன்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பில்லி, என்னுடைய கையில் இருக்கும் மாத்திரைகள் குறித்து கேள்வி எழுப்பினான். நான் நடந்தவை பற்றி கூறியதும் அவனும் அழ ஆரம்பித்துவிட்டான்.

நீ எங்களுக்கு பாரம் என்று யார் சொன்னது. நாங்கள் இருவரும் உன் மீது அளவுகடந்த காதல் வைத்துள்ளோம். நீ இல்லாமல் எங்களால் இருக்க முடியாது என கூறினான்.

பல கட்ட வேதனைகளை அனுபவித்த பின், இறுதியில் என்னுடைய உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். யார் எது கூறினாலும் காதில் வாங்காமல் நடைப்பயிற்சி செய்ய முடிவெடுத்து வெளியில் கிளம்பினேன்.

யாருடைய முகத்தையும் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அங்கு நடந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. யாரும் என்னை கேலி செய்யவில்லைன மாறாக எனக்கு உறுதுணையாக பேச ஆரம்பித்தனர்.

தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது எடையை குறைத்துவிட்டேன்.

என்னுடைய தந்தை சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். அதில் தற்போது நான் ஒரு பயிற்சியாளராக இருந்து வருகிறேன். உடல் எடையால் அவஸ்தையடைந்து வரும் பலருக்கும் நான் உதவி வருகிறேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்