Brexit பிரித்தானிய பயணிகளை பாதிக்குமா? கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் உறுப்பு நாடுகளுடனான சுமூக உறவு கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு பயணப்படும் ஒவ்வொரு முறையும் பிரித்தானியர்கள் 7 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் இது 2021 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறையில் வரும் என கூறப்படுகிறது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்திலும் விடுமுறை கொண்டாட்டத்திற்கு பிரித்தானியர்கள் பதிவு செய்வதில் எவ்வித இடையூறும் இருக்காது எனவும்,

விமான சேவைகள் இடையூறு இன்றி மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஓராண்டு காலத்திற்கு தற்போது கடைபிடிக்கப்படும் அதே கொள்கைகளை விமான சேவை நிறுவனங்கள் கடைபிடிக்கும் எனவும் அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

ஆனால் பிரித்தானியா வெளியேறிய பின்னர், விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, வேறு நகரங்களுக்கு விமான சேவை மேற்கொள்ளவோ பிரித்தானிய விமான சேவை நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் சுமார் 5 மில்லியன் அளவுக்கு விமான பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச விமான சேவை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி இதே கொள்கையை பிரித்தானியா அரசும் மேற்கொள்ளும் எனில், ஆண்டுக்கு 93,000 சேவைகள் பாதிக்கப்படும் எனவும், 20 மில்லியன் பயணிகளின் வரத்து தடைபடும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வளர்ப்பு பிராணிகளை எடுத்துச் செல்லும் பிரித்தானிய பயணிகள் இனி உரிய மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மட்டுமின்றி இனி பிரித்தானியர்களையும் எஞ்சிய உலக நாடுகளின் குடிமக்களை போன்றே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் கருத்தில் கொள்ளும் என கூறப்படுகிறது.

பிரித்தானிய வாகன சாரதிகள் இனி கண்டிப்பாக வாகன காப்புறுதிக்கான பச்சை வண்ண அட்டை கொண்டு செல்ல வேண்டும் எனவும், இல்லை எனில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers