சவுதியில் இருந்து பிரித்தானியாவிற்கு எப்படி தப்பி வந்தேன்? புகலிடம் கோரி வந்த பெண் அனுபவித்த துயரங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

சவுதிஅரேபியாவிலிருந்து பிரித்தானியாவிக்கு புகலிடம் கோரி வந்த பெண், எப்படி நான் அங்கிருந்து தப்பி வந்தேன், எதற்காக இந்த முடிவை எடுத்தேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சவுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தப்பி செல்கின்றனர். அப்படி தப்பித்துச் சென்ற பெண்களில் ஒருவர் தான் ராவன்.

இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு இஸ்லாம் மதத்தை துறந்துள்ளார். இருப்பினும் சமய சடங்கள் அவர் கடைபிடிக்க வேண்டும் என்று குடும்பத்தினரால் நிர்பந்திக்கப்பட்டார்.

ஆனால் இதில் எது மீதும் ராவனிற்கு நம்பிக்கை கிடையாது. சவுதியில் சில விஷயங்களை மேற்கொள்ள தந்தை, கணவர் அல்லது மகனின் அனுமதி தேவை, ஏனெனில் அந்தநாட்டு பாதுகாப்பு அமைப்பு அப்படி உள்ளது.

கடவுச் சீட்டு விண்ணப்பிக்க, வெளிநாடு செல்ல, திருமணத்திற்கு என ஆண்கள் கட்டாயம் தேவை.

இந்த பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக ராவனின் தந்தை அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் என்ன படிக்க வேண்டும்? எங்கு செல்ல வேண்டும்? என சர்வாதிகாரம் செய்து வந்துள்ளார்.

இப்படி எந்த ஒரு விஷயத்திற்கும் அப்பாவை கேட்க வேண்டி இருப்பதை நினைத்து அவர் இதை அவமானமாக நினைத்துள்ளார்.

இதனால் இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசித்துள்ளார்.சவுதி பெண்ணாக வேறு நாடுகளில் புகலிடம் தேட முடியும் என்பது தெரியாமல் இருந்துள்ளார்.

இதனால் சமூகவலைதளங்களை பயன்படுத்திய போது, புகலிடம் தேட முடியும் என்ற விஷயம் தெரியவந்துள்ளது.

இதனால் அது குறித்து ஆராய தொடங்கிய போது, சவுதி மக்கள் வேறு நாடுகளுக்கு புகலிட தேட உதவும் இணையதளத்தின் மூலம் ஒருவரிடம் பேசியுள்ளார்.

அந்த நபரும் இவருக்கு உதவுவதாக கூறியுள்ளார். அதன் பின் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக சென்றுவிட்டு, சவுதி திரும்பும் போது, இவரது விமானம் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமானநிலையத்தில் நின்றுள்ளது.

அப்போது ராவனின் குடும்பத்தினர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே புகலிடம் தேடி சமூகவலைத்தளங்களில் அறிந்து கொண்டதால், இது தான் சரியான வாய்ப்பு, இதை தவறவிட்டால் அவ்வளவு தான் என்று ராவன் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதன் பின் ஒரு துண்டு சீட்டில் நான் புகலிடம் கோரி செல்கிறேன் என்று எழுதி அங்கிருக்கும் விமானநிலைய அதிகாரிகளிடம் அவர் கொடுத்துள்ளார்.

அங்கிருந்த பொலிசார் அவர் குடும்பத்திடம் கூறியுள்ளனர். ராவனின் எண்ணத்தையும் மாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் ராவன் பிடிவாதமாக இருந்து, தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டார்.

இப்படி பிரித்தானியாவந்த ராவனினிக்கு புகலிடம் கொடுத்தது ஓடைபி எனும் இளைஞர், அவரும் சவுதியிலிருந்து பிரித்தானியாவிற்கு ஓராண்டிற்கு முன்பு தான் புகலிடம் கோரி வந்துள்ளார்.

மேலும் இவர் சவுதியில் இருக்கும் மக்கள் அங்கிருந்து தப்ப ஓர் அரசுசாரா அமைப்பின் துணையுடன் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்