மகளை விட இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் தாய்... காரணம் இதுதான்.. வியக்கவைக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தாயும், மகளும் அக்கா - தங்கை போல காட்சியளிக்கும் நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Essex-ஐ சேர்ந்தவர் பெக்கி பிரவுன் (45). இவர் மகள் ஸ்கார்லெட் சவுண்டர்ஸ் (22).

ஸ்கார்லெட்டுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் அவர் கர்ப்பமாக உள்ளார்.

ஸ்கார்லெட்டின் தாய் பெக்கி பாட்டியாகிவிட்டாலும் மிக அழகாக, இளமையாக மற்றும் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார்.

KENNEDY NEWS AND MEDIA

இதனால் பலரும் பெக்கியையும், ஸ்கார்லெட்டையும் தாய், மகள் என நினைப்பதற்கு பதிலாக அக்கா, தங்கை என நினைத்து விடுகிறார்கள்.

இது குறித்து பெக்கி கூறுகையில், நானும் ஸ்கார்லெடும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

எங்களின் உருவம் மட்டும் ஒன்றல்ல, குணாதியங்களும் பல விடயங்களில் ஒன்று தான்.

KENNEDY NEWS AND MEDIA

நான் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு காரணம் என் தாயிடம் இருந்து வந்த மரபணு என்று தான் நினைக்கிறேன்.

என் தாய் 85வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார், ஆனாலும் அவர் கவர்ச்சியாகவே உள்ளார்.

என்னையும், ஸ்கார்லெடையும் சகோதரிகள் என பலரும் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

KENNEDY NEWS AND MEDIA

KENNEDY NEWS AND MEDIA

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்