வேலையாட்களின் அறையில் உறங்கிய பிரித்தானிய மகாராணி: வெளியான ரகசியம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி தனது அறையிலிருந்து வெளியேறி வேலையாட்கள் தங்கும் அறையில் தூங்கிய ரகசியம் அவரது உதவியாளர் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெளியாகியுள்ளது.

ஒருநாள் இரவில் நைட்டியுடனும் போர்வைகளுடனும் மகாராணி வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வருவதை கண்ட அரண்மனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

வேகமாக வந்த மகாராணி ’கொஞ்ச நேரம் நான் தூங்கட்டும்’என்று கூறி அங்கிருந்த ஒரு சோபாவில் படுத்து உறங்கியிருக்கிறார்.

மகாராணியை இப்படி வேலையாட்கள் அறையில் தூங்க நிர்ப்பந்தித்த விடயம் எது? மகாராணியின் இரண்டு நெருங்கிய உதவியாளர்களுக்கு, எப்போதுமே யார் ராணியாரின் கவனத்தை ஈர்ப்பது என்பதில் கடும் போட்டி.

இதனால் அவ்வப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடக்குமாம்.

அப்படி ஒருநாள் இருவரும் உச்ச ஸ்தாதியில் சண்டையிட, தனது படுக்கை அறையில் படுத்திருந்த மகாராணியார், ஆளை விடுங்கள் நான் கொஞ்ச தூங்கினால் போதும் என்று போர்வைகளை எடுத்துக் கொண்டு தனது அறையிலிருந்து வெளியேறி வேலையாட்கள் அறையில் படுத்து நிம்மதியாக உறங்கினாராம்.

அந்த சண்டையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் Peggy Hoath, இன்னொருவர் May Prentice. மகாராணியாரின் உதவியாளராக 35 ஆண்டுகள் பணியாற்றிய Peggy Hoath, ராஜ சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.

திருமணம் கூட செய்யாமல் மகாராணியாருக்காக கடைசி வரை பணியாற்றியவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 89ஆவது வயதில் அவர் மரணமடைந்ததையொட்டி, அவரை நினைவு கூறும் விதமாக வேடிக்கையாக இன்னொரு ஊழியர் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்