ரயில் நிலையத்திற்கு வெளியே பயங்கரமாக மோதிக்கொண்ட பிரித்தானியர்கள்: வேதனையடையும் இளைஞர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக மோதிக்கொண்டதில் பாதிக்கப்பட்ட இளைஞர், வேதனையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தென்கிழக்கு லண்டனில், மில்வால் - எவர்டன் என்கிற இரு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிக்கு முன்னதாக ரசிகர்கள் பலமாக மோதிக்கொண்டனர்.

சர்ரே Quays ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில், ஜேசன் பர்ன்ஸ் என்கிற இளைஞர் மட்டும் பலத்த காயமடைந்தார்.

இதில் பாதிக்கப்பட்ட அவருடைய முகத்தில் 20 தையல்கள் போடப்பட்டன. இந்த நிலையில் அந்த புகைப்படத்தினை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேசன், என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவத்தின் போது ஒரு இளைஞருக்கு காயம் அடைந்தது உண்மை தான். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்