ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை துஸ்பிரயோகித்து எச்.ஐ.வி-யை பரப்பிய மர்ம நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை துஸ்பிரயோகம் செய்து, எச்ஐவி நோயினை பரப்பிய குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டலில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட கேசி என்கிற 50 வயது பெண், கருணை இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளார். அவருடன் வேறு சில 5 நபர்களும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு திடீரென கேசி மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கிறார். இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பொழுது அவருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதுவும் பாலியல் உறவு மூலம் பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவருடைய தாய், 2006 முதல் 2016 வரை இரவு நேரம் கருணை இல்லத்தில் பணிபுரிந்தவர்களால் தான் மகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் 10 வருட காலத்தில் எப்பொழுது இந்த சம்பவம் நடந்தது, என்பதற்கான ஆதாரங்களை திரட்ட முடியாமல் தடவியல் துறையினர் திணற ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த வழக்கினை 2017ம் ஆண்டே மூடிவிட்டதாக பொலிஸார் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட பெண் மற்றும அவருடைய தாய்க்கு போன் செய்து நலம் விசாரித்து வருவதாகவும், கருணை இல்லத்தில் உடன் இருந்த மற்ற 5 பேரை வேறு புதிய இல்லங்களுக்கு மாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்