மேகன் மெர்க்கலை எச்சரித்த ராயல் பாதுகாப்பு பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் காரை விட்டு இறங்கியதும் கதவை மூட வேண்டாம் என ராயல் பாதுகாப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசி மேகன், முதல் முறையாக செப்டம்பர் 25ம் தேதி அரச முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் காரை விட்டு வெளியில் இறங்கியதுமே கதவை மூடிவிட்டு நடந்து சென்றார்.

ஆனால் வாரங்கள் கழித்து ஆக்லேண்டில் ஒரு விஜயத்தின் போது, ​​கார் கதவை மூடாமல் அப்படியே திறந்தபடி விட்டு சென்றார்.

இந்த நிலையில் இருவரின் பாதுகாப்பு குறித்து ராயல் பாதுகாப்பு பொலிஸார் எச்சரிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் எளிதில் பொதுமக்களை சந்தித்து நெருக்கமாக பேசி வருகின்றனர். இதனால் அவர்களை காண மக்கள் கூட்டமும் நெருங்கி வருகிறது.

எதிர்பாராத நேரத்தில் அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால், அவர்களை வேகமாக திரும்ப காரில் ஏற்றுவதற்கு பாதுகாவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

அவர்கள் பயன்படுத்தும் கார்கள், சுய பூட்டுதல் வசதியை கொண்டிருக்கின்றன. இதனால் அவர்கள் பூட்டாமல் இறங்கினாலும், சிறிது நேரத்தில் அதுவே பூட்டிக்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இளவரசர் ஹரி, மேகனை திருமணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஜி குழுவை சேர்ந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்