இறந்த குழந்தையுடன் வாழ்ந்த பெற்றோர்.. அவள் தேவதை என உருக்கம்: கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கருவிலேயே இறந்த குழந்தையின் சடலத்தை இரண்டு வாரம் பெற்றோர் வைத்திருந்த நிலையில், தங்களை போலவே பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு உருக்கமான உதவியை செய்து வருகிறார்கள்.

நிக் பிளட்சர் என்ற நபர் தனது மனைவி லிசாவுடன் வசித்த நிலையில் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் லிசா மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து லிசாவின் பெண் குழந்தை கருவிலேயே இறந்தது.

இதன்பின்னர் குழந்தை தாய் வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

குழந்தைக்கு லில்லி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் அதன் சடலத்தை லிசாவும், நிக்கும் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

சடலத்துக்கு உயிருடன் இருக்கும் குழந்தைக்கு அணிவிப்பது போல ஆடையை அணிவித்தனர். பின்னர் லில்லியை தனது குடும்பத்தாரிடம் அதன் பெற்றோர் காட்டினார்கள்.

லில்லியின் சடலத்தை வைத்து கொண்டு 2 வாரங்கள் குடும்பத்தார் வாழ்ந்தனர். பின்னர் குழந்தையின் சடலத்தை சுடுகாட்டில் புதைத்தார்கள்.

இது குறித்து லில்லியின் தாய் லிசா கூறுகையில், குழந்தையை இழந்த வேதனையை என்னை போல ஒரு தாய் தான் உணரமுடியும்.

அவள் சடலமாக என் கண்ணுக்கு தெரியவில்லை, ஒரு தேவதையாக தான் தெரிந்தாள்.

மருத்துவமனையில் உயிரோடு இருக்கும் குழந்தையை போல தான் லில்லியை அனைவரும் நடத்தினார்கள்.

லில்லியின் நினைவாக, என்னை போல குழந்தையை கருவில் இழந்து தவிக்கும் பெற்றோருக்கு என்னால் முடிந்த ஒரு உதவியை செய்து வருகிறேன்.

அதாவது தேவதைகள் உடை எனப்படும், இறந்த குழந்தைகளுக்கான உடைகளை இலவசமாக கொடுத்து வருகிறோம்.

இந்த உடைகளை மருத்துவமனைக்கும், இறுதிச்சடங்கு நடக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்