பெண்களை வைத்து பாலியல் தொழில்: வருமானத்தில் ராஜ வாழ்க்கை நடத்திய பிரித்தானிய பொலிஸ்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவியுடன் சேர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பொலிஸ் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கார்ல் ரிங் (34) சிறப்பு பொலிஸாராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய ஹங்கேரி நாட்டு மனைவியான ஐவெட் ஸுதா (32) உடன் சேர்ந்து, 100 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

தம்பதியினர் வைத்து நடத்தி வரும் ஆன்லைன் இணையத்தளம் மூலம் ஏராளமான இளம்பெண்களை கவர்ந்துள்ளனர்.

குறைவான டிக்கெட் விலை கொண்ட விமான மூலம், ஹங்கேரி நாட்டிலிருந்து லண்டனிற்கு பெண்களை வரவழைத்துள்ளனர்.

பில்லியனார் டோரி டோனோர் கிறிஸ்டோபர் மோரனுக்கு சொந்தமான செல்சியா குளோஸ்டர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அதில் என்ன தொழில் நடக்கிறது கூட என்பதை கூட அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாதம் £100,000 வாடகையாக வசூலித்து வந்துள்ளார்.

பாலியல் அழகிகளின் மூலம் மாதத்திற்கு £600,000 சம்பாதித்த தம்பதியினர், விலை மிகுந்த ஆடைகள் கார், பங்களா என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

அதேசமயம், பணமில்லாமல் தவித்த குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இதற்கு ஐவெட் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை மாற்றி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்