பிரித்தானியாவின் வருங்கால மன்னரையே வீழ்த்திய பிரான்ஸ் பாலியல் தொழிலாளி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரான்சில் பாலியல் தொழில் கொடி கட்டி பறந்த காலம் அது. 11,000,000 பவுண்டுகள் கூலியாகப் பெற்ற பாலியல் தொழிலாளி முதல் பிரித்தானியாவின் வருங்கால மன்னரையே வீழ்த்திய அழகி வரை அவர்கள் பாரீஸையே ஆட்சி செய்தார்கள் எனலாம்.

நெப்போலியன் பிரான்சை ஆண்ட காலத்தில் பிரான்சில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதால் கொடி கட்டிப்பறந்தது.

இன்று போல் அல்லாமல் அன்று மிகப்பெரிய செல்வந்தர்களின் புண்ணியத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்தார்கள் அந்த பெண்கள்.

அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவள்தான் ஜீன் கிரானியர். பல செல்வந்தர்களின் மனம் கவர்ந்தவளாக விளங்கிய ஜீனின் காதலர்களில் முக்கியமானவர், விக்டோரியா மகாராணியின் மூத்த மகனும் இங்கிலாந்தின் வருங்கால மன்னராக ஆக இருந்தவருமான ஏழாம் எட்வர்ட்.

ஒரு ஓபரா பாடகியாகவும் விளங்கிய ஜீனின் அழகில் மயங்கிக் கிடந்தாராம் இளவரசர் எட்வர்ட்.

1889ஆம் ஆண்டு மாண்டி கார்லோவிலுள்ள கிராண்ட் ஹோட்டலில் இருவரும் தங்கி மகிழ்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

ஜீனைப்போலவே பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் மறுபக்கம் மேடை நாடக நடிகைகளாக இருந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகள் பலர் தங்களுக்கு ஒரு நடிகையாக ஒரு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு செல்வந்தர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நடிகைகளாக இருந்த பாலியல் தொழிலாளிகள் பலர் புகழ் பெற்ற செல்வந்தர்களின் வைப்பாட்டிகளாக மாறி அதனால் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை பிரான்சில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக இருந்திருக்கிறது.

பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றம் பாலியல் தொழிலாளிகளின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வாக்களித்ததுடன் இந்த புகழ் பெற்ற பெண்மணிகளும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போயிருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers