திருமணத்திற்கு ஒரு வாரம் முன் காதலியை கைவிட்ட காதலர்: அதிர்ச்சி காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தனது காதலியை கைவிட்டார் ஒரு காதலர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த எமிலி நிக்கல்சன் (24) அவுஸ்திரேலியாவில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவந்தபோது அவருக்கும் ஜேமி ஸ்மித் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

எமிலி நிக்கல்சனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அவரது தாயார்.

மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனை முடிவுகள் அவளுக்கு பெருத்த அதிர்ச்சி செய்தி ஒன்றைக் கொடுத்தன.

ஆம், எமிலிக்கு மூளைப்புற்றுநோய் வந்திருந்தது, அவர் இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இருக்கும் ஒரு வருடமாவது சந்தோஷமாக வாழ வேண்டும் என முடிவு செய்த ஜோடி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது.

இதற்கிடையில் சிகிச்சைக்காக ஸ்டீராய்டுகள் எடுத்துக் கொண்டதால் எமிலியின் உடல் எடை வேகமாக ஏறியது. ஸ்லிம்மாக இருந்த முன்னாள் மொடலான எமிலி, குண்டாகி விட்டார்.

திருமணத்திற்கு சரியாக ஒரு வாரம் இருக்கும்போது,ஜேமியிடமிருந்து எமிலிக்கு பேஸ்புக்கில் செய்தி ஒன்று வந்தது, அதில் தான் அவரை விட்டு விலகுவதாக கூறியிருந்தார் ஜேமி.

அப்படியானால் நீ என்னை நேசிக்கவில்லையா என்று எமிலி கேட்டதற்கு, நீண்ட காலத்திற்கு முன்பே எமிலியை பிரிய முடிவு செய்து விட்டதாக பதிலளித்தார் ஜேமி.

தான் குண்டானதால்தான் தன்னை ஜேமி பிரிய முடிவு செய்ததாக எமிலி குற்றம் சாட்ட, அவள் எப்போதோ குண்டாகி விட்டாள், அப்படியானால் நான் எப்போதோ திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும், அவள்தான் என்னை விட்டு விலகிப் போய் விட்டாள் என்று ஜேமி பதிலுக்கு குற்றம் சாட்ட, கடைசியில் திருமண நாளுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், திருமணம் நின்று போய்விட்டது.

ஜேமியைப் பொருத்தவரையில், காதலின் ஆழம் தோல் வரைக்கும்தான் என்று கூறுவது சரிதானோ என்னவோ?

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்