பிரித்தானிய இளவரசர் எதற்காக மன்னிப்பு கேட்கவில்லை?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் கார் மோதி விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரிடம் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.

விபத்து நடந்து இரு தினங்களுக்கு பின்னரே ராணியாரும் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய இளவரசர் மன்னிப்பு கேட்காததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் Freeman கூறியதாவது, நடந்த சம்பவத்திற்கு அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரினால், இளவரசர் செய்தது தவறு என்றாகிவிடும்.

இதனால், மன்னிப்பு கேட்காமல் இருக்கிறார். அவரிடம் இரண்டு வழிகள் இருக்கிறது. தற்போது விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதால், விசாரணை முடிவும்வரை பொறுமை காப்பது, அல்லது ஒட்டுநர் உரிமத்தை ஒப்படைப்பது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers