இளவரசர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் கார் ஓட்டும்போது ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், அவர் மீது தவறு இருந்தால் அவரை தண்டிக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்.

பிரித்தானிய இளவரசர் பிலிப், தனது காரில் செல்லும்போது இன்னொரு காருடன் அவரது கார் மோதியது.

மோதிய வேகத்தில் இளவரசரின் கார் ஒரு பக்கமாக சாய்ந்தது. பெரிய காயங்கள் எதுவுமின்றி இளவரசர் தப்பினாலும், அவரது காருடன் மோதிய மற்ற காரில் பயணித்த, Emma Fairweather என்னும் பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது.

அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணித்த இன்னொரு பெண்ணும், குழந்தையும் காயமின்றி தப்பினர்.

அவரிடம், இளவரசர் மீது தவறு இருந்தால் அவரை தண்டிக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்கிறார் Emma.

எனக்கும் இளவரசர் பிலிப்புக்கும் உயிர் ஒரே வகையா இல்லையா என்பது முடிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ள Emma, என்னை நடத்துவது போலவே அவரை நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

விபத்துக்குப் பின்னர் புது கார் ஒன்றை ஓட்டி வரும் இளவரசர் பிலிப், இப்போதும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வருவதைக் குறித்து Emma, கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாதவர் அவர் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers