தென் ஆப்பிரிக்க கடலில் சடலமாக மிதந்த பிரித்தானியா மொடல் அழகி: உதவி கேட்கும் தந்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தென் ஆப்பிரிக்கா கடலில் சடலமாக மிதந்த பிரித்தானிய மொடல் அழகி வழக்கில், சாட்சிகள் யாரேனும் இருந்தால் வந்து உதவுமாறு இளம்பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த நூலீன் மற்றும் பாப் மூட்லியார் தம்பதியினரின் 19 வயதான மகள் Sinead, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பட்டபடிப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த ஆண்டு தன்னுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு Umhlanaga பகுதியில் உள்ள தங்களுடைய சொந்த பிளாட்டில் தங்கி பொழுதை கழித்து வந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாள் Sinead மர்மமான முறையில் கடலில் மிதந்தது வருவதை பார்த்த கடற்படை ஊழியர்கள், வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் பிரித்தானியாவில் இருந்த Sinead-வின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைப்படையில் விரைந்து வந்த பாப் செய்தியாளர்களை சந்திக்கையில், என்னுடைய மகள் அவளுடைய தோழியுடன் கடலில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சென்றிருப்பாள்.

அப்போது மிகப்பெரிய கடல் அலை தாக்கியதில் சிக்கி பாதையில் மோதி இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டு செய்தியாளர்களை சந்தித்துள்ள பாப், என்னுடைய மகள் அரசியல் அறிவியல் படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார். அவள் பிளாட்டில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

இதுபற்றி தெரிந்த யாரேனும் தகவல் கொடுத்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தால் தான் உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers