அழகால் சிக்க வைத்து கோடீஸ்வரரை கொலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரவழைத்து, குண்டர்கள் உதவியுடன் அவரை அடித்து காரின் பின்பக்கத்தில் அடைத்து, தீவைத்து கொளுத்தி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த ஒரு இளம்பெண், தனது குறுகிய கால தண்டனைக்குப்பின் அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

Mundill Mahil என்னும் அந்தப் பெண்ணின் கணவராகிய Varinder Singh-Bola லண்டனில் உள்ள சிறு நகரம் ஒன்றில் மேயராக போட்டியிட இருந்தார்.

சிறை சென்ற Mundill, மேயரை மணப்பதால் சமுதாயத்தில் அடையப்போகும் திடீர் உயர்வைக் குறித்து பத்திரிகைகள் பெருமளவில் எழுதின.

இதனால் கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. முன்னாள் குற்றவாளிக்கு கணவரால் வந்த திடீர் வாழ்வு என பத்திரிகைகள் எழுதின.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து Singh-Bola தான் மேயர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி விட்டதாக நேற்று அறிவித்தார்.

கணவர் மேயர் தேர்தலிலிருந்து விலகி விட்டதால், பிரபலமாகிவிடும் கனவில் இருந்த Mundillஇன் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers