நிர்வாணமாக கிடந்த பாலியல் தொழிலாளியின் சடலம்: 18 வருடங்களுக்கு பின் சிக்கிய குற்றவாளி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த விபச்சார அழகியின் வழக்கில் 18 வருடங்களுக்கு பிறகு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பிராட்போர்டு பகுதியை சேர்ந்தவர் 19 வயதான ரெபேக்கா ஹால், 4 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார்.

பாலியல் தொழில் செய்து வந்த ரெபேக்கா, கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

13 நாட்களாக வீடு திரும்பாத ரெபேக்கா, நகர பகுதியில் நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்தார். அங்கிருந்து சிறிது தூரத்தில் அவருடைய ஆடைகள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதனை கைப்பற்றி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில் படிந்திருந்த டி.என்.ஏ-வை வைத்து அதிகமான குற்றவாளிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ரெபேக்கா கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அதற்கான அடையாளமாக அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடந்து வந்த விசாரணையில், தற்போது 35 வயதுள்ள பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers