பிரித்தானியர்களில் பலரது அப்பாக்கள் உண்மையில் அவர்களது அப்பாக்கள் இல்லை: பேரதிர்ச்சி தரும் ஒரு செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனைச் சேர்ந்த Louise McLoughlin (27), 13 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் அவரிடம் முக்கியமான ஒரு விடயம் பேச விரும்புவதாகக் கூறி அவரை தங்கள் இருவருக்கும் இடையே அமர வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் கூறிய விடயம் Louiseஇன் மொத்த பர்சனாலிட்டியையும் அப்படியே தகர்த்துப் போட்டது.

Louiseஇன் தந்தை உண்மையில் அவளது தந்தை அல்ல என்றும், செயற்கை கருவூட்டல் முறையில் இன்னொரு ஆணின் விந்தணுக்களையும் சேர்த்து கருவூட்டப்பட்டதால் அவள் ஒருவேளை வேறொருவரின் மகளாகவும் இருக்கலாம் என்ற அதிர்ச்சி செய்தியை அவளிடம் கூறினர் அவளது பெற்றோர்.

13 வயதில், அந்த செய்தி அவளது பிஞ்சு இதயத்தை சுக்கு நூறாக்க, அன்று முதல் அவள் யாரிடமும் சரியாக பேசவில்லை.

மனக்குழப்பங்களுடனேயே வாழ்ந்து வந்த Louise, 15 வயதாகும்போது ஒரு DNA சோதனை செய்யவேண்டும் என நிர்ப்பந்தித்தாள்.

DNA சோதனையின் முடிவு வர, நடுக்கத்துடன் அதை பிரித்து பார்த்தபோது, அவளது தந்தை, உண்மையில் அவளது தந்தை இல்லை என்றே கூறியது அந்த சோதனையின் முடிவுகள்.

தொடர்ந்து தனது தந்தையுடனே வாழ்ந்தாலும், அவளுக்கும் அவளது பெற்றோருக்கும் இடையே ஒரு பெரிய பிளவு ஏற்பட்டதை உணர யாரும் தவறவில்லை.

Louiseஇன் குடும்பம் என்று இல்லை, பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 4 சதவிகிதம், அதாவது 2.6 மில்லியன் பிரித்தானியர்கள், தங்கள் பெற்றோரில் ஒருவர் (பெரும்பாலும் தந்தை) உண்மையில் தங்களுடன் தொடர்புடையவர் இல்லை என்று நம்புவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது ஒரு பேரதிர்ச்சி அலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரபல கோடீஸ்வரான Richard Masonக்கு, DNA சோதனையில், தனது மூன்று மகன்களுமே தனக்கு பிறக்கவில்லை என்பது தெரியவர, குடும்பம் சிதைந்து போனது. மனைவியை விவாகரத்து செய்து அவரிடமிருந்து 250,000 பவுண்டுகள் இழப்பீடு பெற்றாலும், அதை விட பெரிய இழப்பு, அவரது இரண்டு மகன்கள் தற்போது அவரிடம் பேசுவதில்லை.

இன்னொருபக்கம், பிரித்தானியாவில் என்றில்லாமல் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பரிசாக DNA சோதனை செய்யும் கிட்களை பரிசளிப்பது அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் முடிவுகளால் பல குடும்பங்கள் சிதைந்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers