மகளை கைவிட்டு பேத்தியுடன் தவறான உறவு: தாக்கிய பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது மகளை 12 ஆண்டுகள் காதலித்த நபர் ஒருநாள் திடீரென தனது பேத்தியுடன் தவறான உறவு வைத்துக் கொள்ள, ஆத்திரமுற்ற ஒரு முதியவர் அந்த நபரை பழிவாங்குவதற்காக தாக்கினார்.

Christopher Willett (36) என்னும் நபர் Claire (43) என்னும் பெண்ணுடன் 12 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

பின்னர் அவர் Claireஇன் மகளான Sasha (22)வுடன் தவறான உறவு வைத்துக் கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் Claireவை விட்டு விட்டு Sashaவுடன் வாழத் தொடங்கினார். இந்நிலையில் ஒருநாள் வேலைக்கு சென்றிருந்த Christopher தனது காரில் ஏறும்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கோடரியால் அவரைத் தாக்கினார்.

படுகாயமுற்றாலும் அந்த நபரின் முகமூடியை கிழித்தெறிந்தார் Christopher. அப்போதுதான் தெரிந்தது அது தனது புதிய காதலியின் தாத்தாவும் பழைய காதலியின் அப்பாவுமான John Quantrell (65) என்பது.

மோசமான காயங்களுடன் Christopher மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, John பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று Johnக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Christopherஐ கொலை செய்ய முயன்றதற்காக அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers