ஹரி-மெர்க்கல் தம்பதியினரை மட்டும் பிறந்தநாளுக்கு அழைக்காத கேட்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு ஹரி-மெர்க்கல் தம்பதியினரை அழைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த ஹரி-மெர்க்கல் தம்பதியினருக்கும், வில்லியம்-கேட் தம்பதியினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

இதன் காரணமாக தான் ஹரி, அரண்மனையில் இருந்து வெளியேறி தன்னுடைய கர்ப்பிணி மனைவியுடன் ஃபிரோமோர் குடிசையில் குடியேற உள்ளதாக வதந்திகள் பரவின.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த கிறிஸ்துமஸ் விழாவில், இரு தம்பதியினரும் சிரித்த முகத்துடன் கலந்து கொண்டனர்.

இதனை பார்த்த அரச குடும்பத்து ரசிகர்கள், செய்திகளில் வெளியாகிய அனைத்தும் வதந்திகள் என கூற ஆரம்பித்தனர். அதற்குள் புது சர்ச்சையாக ஒன்று எழுந்துள்ளது.

இளவரசி கேட் தன்னுடைய 37 வது பிறந்தநாளை, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நோர்போக்கில் உள்ள ஆடம்பர அன்மர் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கொண்டாடினார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபுறம் கேட் அழைப்பு விடுத்து அதனை ஹரி தம்பதி நிராகரித்ததாகவும், மற்றொரு புறம் கேட் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இரண்டு தம்பதியினருக்கு இடையில் இன்னும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers