காதலனுடன் சேர கணவரை 3 முறை கொல்ல முயன்ற மனைவி: இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னை மூன்று முறை கொலை செய்ய முயன்ற மனைவியை சிறையில் சென்று பார்த்து நலம் விசாரித்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேய் வெதர்ஆல் (53) என்ற நபர் தனது மனைவி ஹேலே (32) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹேலேவுக்கு கிளன் பொல்லார்ட் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொல்லார்டுடன் சேர்ந்து வாழ, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் வெதர்ஆலை கொலை செய்ய முடிவெடுத்தார் ஹேலே.

அதன்படி கள்ளக்காதலன் பொல்லார்ட் மற்றும் அவரின் மகள் ஹெதருடன் சேர்ந்து வெதராஆலை துப்பாக்கியால் சுட்டார்.

ஆனால் இதில் காயத்துடன் தப்பித்தார் வெதர்ஆல். பின்னர் விஷம் வைத்து மற்றும் தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்று அது பலிக்கவில்லை.

இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெதர்ஆலின் மனைவி ஹேலே, அவர் கள்ளக்காதலன் பொல்லார்ட் மற்றும் ஹெதரை பொலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து பொல்லார்டுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற இருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனிடையில் தன்னை கொல்ல முயன்ற மனைவியை பரந்த மனதோடு சிறைக்கு சென்று சந்தித்துள்ளார் வெதர்ஆல்.

சந்தித்தோடு திருமணநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

சிறையில் இருவரும் கட்டிபிடித்து கொண்ட நிலையில் ஹேலே தனது கணவரிடம் ஐ லவ் யூ என கூறியுள்ளார். இதன்பின்னர் இருவரும் சிறிது நேரம் நெகிழ்ச்சியுடன் பேசியதாக தெரியவந்துள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers