பிரித்தானியாவில் 2 திருநங்கை உறுப்பினர்களை கொண்ட முதல் தலைமுறை குடும்பம்! வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து திருநங்கையாக மாறிய தந்தை, அதே நிலையை அடைந்துள்ள தனது வாரிசு குறித்து கவலையுடன் பேசியுள்ளார்.

North Lanarkshire-ஐ சேர்ந்தவர் கிரேக் (27). இவர் பிறக்கும் போது பெண்ணாக பிறந்தார். ஆனால் 16 வயதாக இருக்கும் போது தனது உடலில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து தனது மார்ப்பகங்களை நீக்கும் அறுவை சிகிச்சையை கிரேக் செய்து கொண்டார்.

பின்னர் திருநங்கையாக வாழ தொடங்கிய அவருக்கு ஜொடி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.

இதையடுத்து இருவருக்கும் குழந்தை பிறந்தது. கிரேக் இன்னும் பிறப்புறுப்பை மறுசீரமைக்கும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை.

இதனிடையில் தம்பதிக்கு ஜெய்டன் என்ற ஆண் குழந்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது.

ஆனால் கடந்த ஆண்டில் இருந்து சிறுவனான ஜெய்டன் தனக்குள் பெண்மையை உணர தொடங்கினார்.

இதையடுத்து பெண்ணை போல நீளமான முடியை வளர்த்து கொண்ட ஜெய்டன் பெண்கள் அணியும் உடையை அணிய தொடங்கினார்.

இதன்மூலம் பிரித்தானியாவில் 2 திருநங்கை உறுப்பினர்களை கொண்ட முதல் தலைமுறை குடும்பம் இவர்கள் தான் என நம்பப்படுகிறது.

ஆனால் ஜெய்டனின் மாற்றம் அவர் தந்தை கிரேக்குக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

அவர் கூறுகையில், திருநங்கையாக வாழும் வலி எனக்கு தெரியும், ஜெய்டன் சமூகத்திலும், இணையத்திலும் கிண்டல்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாவார் என பயப்படுகிறேன்.

ஜெய்டன் என்னிடம் முன்னர், ஆண்கள் உடையை அணிய வெறுக்கிறேன் என கூறினார், அப்போது தான் அவர் உடலில் மாற்றம் ஏற்படுவதை நான் உணர்ந்தேன், ஜெர்டனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான எண்ணம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers