காதலிக்கும் போதே ஹரியை மாற்ற ஆரம்பித்த மெர்க்கல்: வெளியான தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் உணவு வகைகளில் மெர்க்கல் அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக, அரச குடும்பத்து எழுத்தாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

தம்பதியினர் இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எழுத்தாளர் ஆண்ட்ரூ மோர்டன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், இளவரசி மெர்க்கல் உணவு வகைகளில் அதிக கவனம் செலுத்த கூடியவர். அவர் சமைப்பதை அதிகம் நேசிக்கிறார். புதிய உணவுகளை ஆராய்வதுடன் அவற்றை சுவையாக சமைத்து பார்க்கிறார்.

மெர்க்கல், ஹரியுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அவருடைய உணவு வகைகளில் அதிக மாற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஹரியின் குளிர்சாதன பெட்டியில் எப்பொழுதுமே ஹம்மாஸ், கேரட், பச்சை ஜூஸ், பாதாம் மற்றும் சியா விதை ஆகியவை தான் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றிருந்த ஹரி, மது மற்றும் டீ போன்ற பழக்கங்களில் இருந்து விடப்பட்டு, பார்ப்பதற்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்