சக்கரத்திற்குள் சிக்கிய நபரின் மீது ஏறி இறங்கிய லொறி: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் 30 வயதுள்ள ஒருவரின் மீது அதிகப்பளு கொண்ட லொறி ஏறி இறங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியல் செயல்பட்டு வரும் கடை ஒன்றிற்கு வெளியில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடையில் இருந்து வேகமாக இருவர் வெளியேறி கொண்டிருந்தனர். கையில் ஒருவர் பையுடனும், மற்றொருவர் சாதாரணமாகவும் நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது பையுடன் வந்து கொண்டிருந்த நபர் திடீரென கால் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அப்போது கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய லொறி ஒன்று வேகமாக திரும்பியது.

கீழே விழுந்து கிடந்த நபரை கவனிக்காமல் அவரின் மீது ஏறி இறங்கியது. இதனை பார்த்ததும், அருகில் இருந்த நபர் அதிர்ச்சியடைந்து உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பிக்கிறார்.

இந்த வீடியோ காட்சியானது சமீப நாட்களாக இணையத்தில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் கடந்த 10ம் தேதியன்று நடந்ததாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் லொறியின் சக்கரப்பகுதியில் சிக்கிக்கொண்ட நபருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து ஏற்படுத்திய 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்