பிரித்தானியாவில் லாட்டரி அதிர்ஷ்டத்தால் மில்லியனர்களாக மாறிய நபர்கள் செய்த நெகிழ்ச்சி உதவி! வெளியான தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் லாட்டரியின் அதிர்ஷ்டம் மூலம் மில்லியனர்களாக மாறிய நபர்கள் அந்த பணத்தை பலருக்கும் உதவும் வகையில் கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

தற்போது இருக்கும் உலகில் லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தை பெரும்பாலானோர் தங்களின் ஆடம்பர செலவிற்கே வைத்து கொள்கின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விலையுயரந்த கார்கள் வாங்குவது, வீடுகள்,விலையுயர்ந்த ஹோட்டல்களுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் என்று அனுபவிப்பர்.

அதில் சிறிதளவு கூட கஷ்டப்படும் நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர் மட்டுமே, அந்த சிலர் தொடர்பான தகவல்களை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

Frances-Patrick Connolly தம்பதி

அயர்லாந்தின் வடக்கு Armagh கவுண்டியைச் சேர்ந்த தம்பதி Frances-Patrick Connolly. இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 115 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் பரிசாக விழுந்தது.

அந்த நேரத்தில் Patrick Connolly சகோதரி கஷ்டத்தின் காரணமாக வீட்டை விற்பதற்கு முடிவு செய்திருந்தார்.

ஆனால் சகோதரியின் நிலையை புரிந்து கொண்டு அவரிடம் வீட்டை விற்க வேண்டாம், எங்களிடம் பணம் இருக்கிறது உதவுகிறோம் என்று அவருடைய வீட்டை காப்பாற்றியுள்ளனர். இந்த தம்பதி தான் பிரித்தானியாவின் நான்காவது மிகப் பெரிய லாட்டரி வெற்றியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Angela Maxwell

பிரித்தானியாவின் Lincolnshire பகுதியைச் சேர்ந்த தம்பதி Richard (67)- Maxwell(67). இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு 53 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் பரிசாக விழுந்தது.

இவர்கள் பரிசு விழுந்த போதே, அதில் தங்களால் முடிந்த அளவிற்கு இதை சமூகசேவைக்கு பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தனர்.

அதன் படி தற்போது செய்து வருவதாகவும், இருவரும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Peter Congdon

கார்ன்வால் பகுதியைச் சேர்ந்தவரான இவரின் வாழ்க்கை லாட்டரி அதிர்ஷ்டம் மூலம் தான் மாறியது என்று கூறலாம். இவருக்கு லாட்டரி மூலம் 13.5 மில்லியன் பவுண்ட் விழுந்தது.

அதில் பல மில்லியன் தொகையை தொண்டு நிறுவனத்திற்கே இவர் கொடுத்து உதவியுள்ளார்.

Colin and Chris Weir தம்பதி

இந்த தம்பதிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு 161 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. அதில் 5 மில்லியன் பவுண்ட் தொகையை இவர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

Nigel and Sharon Mather தம்பதி

நேஷனல் லாட்டரி டிரா மூலம் இந்த தம்பதிக்கு 12.4 மில்லியன் பவுண்ட் பரிசாக விழுந்தது. இருப்பினும் Nigel சகோதரியின் மகனுக்கு கொடிய நோயான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் வந்துள்ளது.

18-வது பிறந்தநாளை கொண்டாடிய 14-வது நாளிலே அந்த நபர் இறந்துவிட்டார். இதனால் இந்த தம்பதி தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகின்றனர், தங்கள் லாட்டரியில் விழுந்த பணம் மூலமும் உதவி செய்துள்ளனர்.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்