பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்ட அழகிய இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பேஸ்புக் முகப்பு படத்தை மாற்றிய காதலியை காதலன் அடித்து 3 பற்கள், தாடையை உடைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த லோயிஸ் ஆஷ்டன் என்ற 29 வயதான இளம்பெண், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியதாக காதலனால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

தான் அனுபவித்த அதிர்ச்சிகரமான மனஅழுத்தம் பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்து பேசியிருக்கிறார்.

அதில், McNair என்னை காதலிக்க ஆரம்பித்த போது அதிக பாசம் வைத்திருந்தான். சிறிது நாட்கள் கழித்து அந்த பாசம் குறைந்து சிறிது என்னை விட்டு பிரிந்தான்.

ஒருநாள் வீட்டில் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதன்முறையாக என்னை அறைந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

அதன்பிறகு நான் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஆனால் அவன் எனக்கு தொடர்ந்து மெசேஜ் செய்துகொண்டே இருந்தான். மன்னிப்பும் கேட்டுக்கொண்டே இருந்ததால், நான் மீண்டும் பேச ஆரம்பித்தேன்.

டிசம்பர் 2016ம் ஆண்டு ஒரு நாள் வெளியில் கேளிக்கை விடுதிக்கு செல்ல அவனை அழைத்தேன். என்னுடைய நண்பர்கள் அனைவருடனும் நான் மகிழ்ந்து கொண்டிருக்கையில், அவன் மட்டும் யாரோ ஒரு மூன்றாவது நபரை போல தனித்து அமர்ந்து எங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

பின்னர் தோழி ஒருத்தி அவளுடைய வீட்டிற்கு எங்களை அழைத்தாள். ஆனால் McNair அங்கு வர மறுப்பு தெரிவித்து வீட்டிற்கு கிளம்பிவிட்டான். நான் மட்டும் என்னுடைய நண்பர்களுடன் சென்று வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தேன்.

அப்பொழுதுதான் என்னுடைய பேஸ்புக் புகைப்படத்தில் நான் McNair உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கிவிட்டு, நான் மட்டும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டேன்.

மறுநாள் காலையில் என்னுடைய படுக்கையிலிருந்து எழும்போது அருகிலே McNair இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனே அவன் கதவை தாழ்பாள் போட்டுவிட்டு, என்னை கடுமையாக தாக்கினான். உதவி கேட்டு நான் சத்தமாக கத்தினேன். ஆனால் யாருக்கும் என்னுடைய குரல் கேட்கவில்லை. என்னுடைய 3 பற்கள் மற்றும் கீழ் தாடை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது.

நான் இறந்துவிடுவேன் என நினைத்துக்கொண்டிருக்கும் போது தான், சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் என்னை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனை கவனித்த McNair உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட McNair-க்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

11 மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை பெற்ற நிலையில், McNair தற்போது சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். இதனை எச்சரித்தும், எந்த நேரத்திலும் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டாம் எனவும் லோயிஸ் கூறியுள்ளார்.

மேலும் அந்த சம்பவம் நடந்ததில் இருந்தே தனக்கு ஆண்களை பார்த்தால் பயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்