பிரித்தானிய இளவரசி கேட் கர்ப்பம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய ராஜ அரண்மனையில் இன்னொரு குழந்தை சத்தம் கேட்கும் போலிருக்கிறது.

ஏற்கனவே இளவரசி மேகன் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்க, திடீரென இளவரசி கேட் கர்ப்பம் என்னும் ஒரு செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்று சூதாட்டக்காரர்கள் பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

பொதுவாக ராஜ குடும்பத்து குழந்தைகளுக்கு இடையில், குறைந்தது இரண்டு வருடங்கள் இடைவெளி இருக்கும்.

ஆனால் குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்து ஒரு வருடத்திற்கும் குறைவாகவே ஆகிறது.

மூன்று குழந்தைகளில் ஒருவராக வளர்ந்த கேட் எப்போதுமே மூன்று குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்.

ஆனால் முதல் குழந்தைக்கு பிறகு வில்லியம் கொஞ்சம் முரண்டு பிடித்தார்.

அதற்கு காரணம் அவர் இரண்டு பேரில் ஒருவராக பிறந்தது அல்ல, ஜார்ஜை சுமக்கும்போது கேட் கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்பட்டார் என்பதால்தான்.

ஆனால் குட்டி இளவரசி சார்லட், வயிற்றிலிருக்கும்போது அம்மாவுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை.

அதனால் வில்லியம் கேட் தம்பதிகள் அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பத்திரிகையாளர்கள், அரண்மனை அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இதுகுறித்து கருத்துக் கூற மறுத்து விட்டதோடு, கேட் கர்ப்பமானால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளதால் இந்த செய்தி உண்மையா வதந்தியா என்னும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers