பிரித்தானியாவில் 76 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற நபர்! அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த 51 வயது நபருக்கு 76 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற நிலையில், லாட்டரி விழுந்த அடுத்த 24 மணி நேரத்திலே விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

பிரித்தானியாவின் Lincolnshire பகுதியின் Boston பகுதியைச் சேர்ந்தவர் Andrew Clark. 51 வயதான இவருக்கு Trisha Fairhurst என்ற மனைவி உள்ளார்.

கட்டுமானப்பணியாளரான இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 76 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் 17,68,83,82,477.96 ரூபாய்) லாட்டரியில் பரிசாக விழுந்தது.

லாட்டரியில் விழுந்த பணத்தை இவர் என்ன செய்யப்போகிறார்? எப்படி இவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது என்பது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் Andrew Clark தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவராம். வேலையில் அதிக கவனம் செலுத்தும் இவர், லாட்டரியில் பரிசு விழுந்ததைக் கூட, ஆறு வாரங்களுக்கு பின்பு தான் அறிந்துள்ளார்.

இப்படி பல மில்லியன் பெற்றுத்தந்த இந்த லாட்டரி டிக்கெட்டை, அவர் தன்னுடைய காரின் sun visor பின்பகுதியில் சாதரணமாக வைத்துள்ளார்.

அதையும் அவரது மனைவி வற்புறுத்தலின் பேரிலே பார்த்துள்ளார். சற்று அஜாக்கிரதையாக இருந்திருந்தால் 76 மில்லியன் பவுண்டை இழந்திருப்பார்.

இப்படி ஒரே நாளில் மில்லியனராக மாறிய இவர் அந்த பணங்களை நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அதை வைத்து சில சப் காண்ட்ராக்ட்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கு கொடுத்து உதவுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த பணத்தில் தான் சமீபத்தில் £40,000 மதிப்புள்ள Range Rover கார் மற்றும் £50,000 மதிப்புள்ள BMW M3 கார் வாங்கியுள்ளார். அந்த கார் அவருடைய 30 வயது மகனான Jamie வீட்டின் முன்பு நிற்கிறது.

இதைத் தொடர்ந்து பரிசு வென்ற அடுத்த 24 மணி நேரத்திலே £83,000 மதிப்புள்ள C-Class C63 AMG Mercedes கார் மற்றும் £20,000 மதிப்புள்ள Nissan Qashqai காரை Andrew Clark தம்பதி வாங்கியுள்ளனர்.

மேலும் வீடுகள் வாங்கி அதை வாடகைக்கு விடவும் இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers