இளவரசி மேகன் மெர்க்கலின் ஆடைகள் குறித்து வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது ஆடை விடயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்துபவர் என்றும் மற்றவர்களுடன் நற்பழக்கத்துடன் பழகுபவர் என கனடாவை சேர்ந்த Jessica Brownstein என்ற ஆடை வடிமைப்பாளர் கூறியுள்ளார்.

மேகன் மெர்க்கல் நடிகையாக இருந்தபோது அவருக்கு சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்தவர் Jessica Brownstein.

அவர் பகிர்ந்துகொண்டதாவது, மேகன் மெர்க்கல் எப்போதும் கேட் மிடில்டன் அணியும் ஆடைகளை போன்று அணிய முயற்சி செய்கிறார் என்று அவ்வப்போது விமர்சனங்கள் எழுகின்றன.

ஆனால், அப்படி கிடையாது. இருவருக்கும் தனித்தனி ஆடை வடிமைப்பாளர்கள் இருக்கின்றனர். கேட் மிடில்டன் தான் நடக்கும் போது அவர் தனது பாதத்தினை எடுத்தும் வைக்கும் முறை மிக அழகாக இருக்கும் .

இது மட்டுமே இவர்கள் இருவருக்கும் வித்தியாசம். மற்றபடி, மேகன் மெர்க்கல் ஆடைகளை அணிவதில் தனக்கென்று தனி ஸ்டைலை கடைபிடித்து வருகிறார்.

2011 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Sayonara Zara party - க்கு விலை குறைவான ஆடையை அணிந்து வந்ததாகவும் தற்போது இளவரசி ஆனவுடன் அதிக விலைமதிப்பு கொண்ட ஆடைகளை அணிகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், மேகன் எப்போதும் சிறப்பான ஆடைகளை அணிவதையே விரும்புபவர். தனக்கு ஆடைகளை வடிவமைத்துக்கொடுப்பவர்களிடம் மிகச்சிறந்த நற்பண்புடன் நல்ல தோழியாக பழகுபவர், கடைசியாக நானும் அவரும் 2016 ஆம் ஆண்டு கனடாவில் சந்தித்துக்கொண்டோம், அதன்பின்னர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஆடை வடிமைப்பாளர் Jessica Brownstein தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்