பிரித்தானிய மகாராணியாரின் மனதில் இடம் பிடித்தவர் இவர்தானாம்: ஆதாரம் வெளியானது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தொடர்ச்சியாக பிரித்தானிய இளவரசிகள் மேகன் மெர்க்கலும் கேட் மிடில்டனும் செய்திகளில் இடம்பிடித்து வந்தாலும், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றுமகாராணியாரின் மனதில் இடம்பெற்றுள்ளது யார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

சமீபத்தில் பிரித்தானிய அரண்மனை சார்பில், 2018ஆம் ஆண்டில் மகாராணியாரின்சிறந்த தருணங்கள் என்ற வீடியோ ஒன்று பகிரப்பட்டது.

அதில் வருங்கால பிரித்தானிய ராணியாக கருதப்படும் கேட்டைக் காணவில்லை! அந்த வீடியோவுடன் ‘2018ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் நேரத்தில்,மகாராணியாரின் மிகச்சிறந்த தருணங்களில் சில உங்கள் பார்வைக்கு, புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்ற கேப்ஷனும் இடம்பெற்றிருந்தது.

அந்த வீடியோவில் கேட்டைப் பார்க்கமுடியவில்லை, அதே நேரத்தில், மேகன் அந்தவீடியோவில் மூன்று முறை இடம்பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால், அந்த வீடியோவில் ஹரி, மேகன் திருமண புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதனால், மகாராணியாரின் மனதில் இடம்பிடித்துள்ளது கர்ப்பமாக இருக்கும் மேகன் தான், கேட் இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது. அதே நேரத்தில், 2018ஆம் ஆண்டின், ராஜ குடும்ப உறுப்பினர்களின் சிறந்த தருணங்கள் என்ற வீடியோ ஒன்றில் கேட் இடம்பிடித்திருப்பதை மறுக்க முடியாது.

அந்த குறிப்பிட்ட வீடியோவில், மேகனும் மகாராணியாரும் மகிழ்ச்சியுடன் சிரித்துபேசும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதோடு, அந்த நேரத்தில், மகாராணியார் மேகனுக்கு ஒரு ஜோடி வைர மற்றும் முத்து கம்மல்களை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers