பேய் விரட்ட வேண்டுமானால் இனி பொலிசைக் கூப்பிட வேண்டும்: பிரித்தானியாவில் புதிய சட்டம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இனி பேய் விரட்ட வேண்டுமானால், அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பேய் விரட்ட வேண்டுமானால் பொலிசார் அல்லது சமூகப் பணி செய்வோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில்தான் பேய் விரட்ட வேண்டும் என்று இங்கிலாந்து திருச்சபை விதிகள் வகுத்துள்ளது.

இதன்மூலம் பிரித்தானியாவில் முதன்முறையாக பேய் விரட்டும் மத சம்பந்தமான நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

The Exorcist என்னும் பேய்ப்படம் பிரபலமடைந்ததை தொடர்ந்து 1975 முதல் அமுலில் இருக்கும் திருச்சபை விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பு இரண்டு பாதிரியார்கள், தேவைப்பட்டால் ஒரு மருத்துவரின் உதவியுடன் பேய் விரட்ட அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் பேய் விரட்டுவதை பிரபலப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள், பேய் விரட்டுதல் என்பது மத சம்பந்தமான ஒரு நிகழ்வு என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும், அதுவும் குறிப்பாக, மனக் குழப்பங்களுள்ள நிலையில் ஒருவர் இருக்கும்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று கூறுகின்றன.

குழந்தைகளுக்கு பேய் விரட்டும்போது திருச்சபை அலுவலர்களுடன் சமூகப் பணியாளர்களும் உடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதைப் போலவே, இனி சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அளவுக்கு பெருங்குற்றம் செய்த ஒருவர் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கோரும்போது, அது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்