இளவரசி கேட் பிறந்தநாளுக்காக மேகன் மெர்க்கல் கொடுக்கவிருக்கும் மனதிற்கு நெருக்கமான பரிசு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பிறந்தநாளில் அவருக்கு பிடித்தமான ஒரு பரிசுப்பொருளை மெர்க்கல் கொடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசி கேட் மிடில்டனின் 37 வது பிறந்தநாள் அடுத்த செவ்வாய்க்கிழமை ஜனவரி 8 ம் தேதி தொடங்குகிறது.

வழக்கம்போல் தன்னுடைய பிறந்தநாளை கணவர் வில்லியம் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் கொண்டாடுவார்.

இளவரசர் வில்லியம் உடன் டேட்டிங் துவங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைவதால், கேட்டிற்கு இந்த பிறந்தநாள் சற்று சிறப்பு வாய்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேட், இளவரசர் லூயிஸை தன்னுடைய வயிற்றினுள் சுமந்து கொண்டிருந்ததால், அமைதியான முறையில் வீட்டினுள் கொண்டாடி மகிழ்ந்தார்.

அப்போதைய பிறந்தநாளின்போது ஹரியை மெர்க்கல் திருமணம் செய்யவில்லை என்றாலும், பிறந்தநாளுக்கு அன்பாக ஒரு டைரியை பரிசாக கொடுத்திருந்தார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வரவுள்ள பிறந்தநாளுக்கு கூட ஒரு அழகிய டைரி வாங்கியிருப்பதாகவும், அதில் கேட் நேசித்தவை அவருடைய எண்ணங்கள், கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கேட்-மெர்க்கல் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பல செய்திகள் வெளியாகிய நிலையில், அவற்றை பொய்யாக்கும் விதமாக இருவரும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers