ஊசியால் ஏற்பட்ட விபரீதம்: அகோரமாக மாறிய இளம்பெண்ணின் உதடுகள்

Report Print Kavitha in பிரித்தானியா

இங்கிலாந்தில் உதட்டை அழகுப்படுத்தும் ஊசியால் இளம்பெண்ணின் உதடுகள் வீங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரேச்சல் (29 வயது) என்ற இளம்பெண்ணே இச்சம்பவத்திற்கு ஆளாகியுள்ளார்.

ரேச்சல் தனது தோழி வீட்டில் இருந்து உதட்டை அழகுபடுத்தும் ஊசி ஒன்றை தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

அதை எடுத்து வரும்போதே ஊசியை போட்டதும், ஐஸ்கட்டியை உதட்டில் வைக்க வேண்டும் என ரேச்சலிடம் அவரது தோழி கூறினார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ரேச்சல் அந்த ஊசியை தனது உதட்டில் செலுத்தியுள்ளார்.

ரேச்சல் ஊசி போட்ட சில வினாடிகளில் அவரது உதடு வீங்கத் தொடங்கியதை பார்த்து அதிர்ந்து போய் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உதட்டிற்கு ஐஸ்கட்டி ஒத்தனம் செய்தனர். சிறிது நேரத்தில் அவரது பிரச்சனை தீர்ந்தது.

இது குறித்து ரேச்சல் பதற்றத்தில் தனது தோழி சொன்னதை மறந்து தானும் டென்ஷனாகி மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers