பள்ளியின் வெளியே நின்றிருந்த தந்தை... ஆசையாக வந்த மகனுக்கு கண்முன்னே காத்திருந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அயர்லாந்தில் மகனை அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு வெளியே நின்றிருந்த தந்தை, சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் கிராமர் பள்ளியில், ஜிம் டோனகன் (43) என்பவரின் 13 வயது மகன் படித்து வருகிறான்.

கடந்த புதன்கிழமையன்று, மகனை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக டோனகன் பள்ளியின் வெளியே காத்திருந்துள்ளார்.

சரியாக பள்ளி முடிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியில் வந்துகொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயம் அங்கு பச்சை நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருந்த நபர், திடீரென டோனகன் மீது 7 முறை துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் அனைவரின் கண்முன் சிறுவனின் தந்தை துடிதுடித்து இறந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், தற்போது 49 மற்றும் 51 வயதில் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த 7 வயது சிறுவனின் தாய் கூறுகையில், துப்பாக்கி சுடும் சம்பவம் நடைபெற்றபொழுது என்னுடைய மகன் அந்த குற்றவாளியை நேரில் பார்த்துதான். சத்தம் கேட்டு அனைவரும் பயந்து ஓடும்பொழுது, அதிர்ச்சியில் அவன் அங்கேயே குற்றவாளியை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

அவன் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. பள்ளிக்கு திரும்ப சென்றால் அந்த நபர் மீண்டும் வருவானா அம்மா என்று கேட்கிறான் என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்து பயந்து போயிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தற்போது ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்